தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கெளதம் மேனன்-சூர்யா படத்தில் உற்சாகம் அடைந்த பி.சி. ஸ்ரீராம்

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் பணியாற்றுவது உற்சாகம் அளிக்கிறது என ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

GVM
GVM

By

Published : Nov 17, 2020, 4:22 PM IST

ஒரே தலைப்பின்கீழ் பல்வேறு இயக்குநர்கள் இணைந்து "ஆந்தாலஜி" திரைப்படத்தை இயக்குவது தற்போது உள்ள காலகட்டத்தில் ட்ரெண்டாகிவிட்டது. அந்தவகையில் ராஜீவ் மேனன், கவுதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், கார்த்திக் சுப்புராஜ், சுதா கொங்கரா ஆகியோர் இயக்கத்தில் சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான படம் 'புத்தம் புது காலை'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனையடுத்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக மணிரத்தனம் தயாரிப்பில், ஒன்பது முன்னணி இயக்குநர்கள், ஒன்பது முன்னணி ஒளிப்பதிவாளர்கள், ஒன்பது முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து ஒன்பது நவரசங்களை வைத்து 'நவரசா' என்னும் படத்தை இயக்கிவருகின்றனர்.

இந்த படத்தை கே.வி ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த் சாமி ஆகிய ஒன்பது இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

கெளதமேனின் குறும்படத்தில் ஒளிப்பதிவாளராக பி.சி ஸ்ரீராம் பணியாற்றுகிறார். சூர்யா நடிக்கிறார். இந்த படம் குறித்து பி.சி. ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், கெளதம் மேனனுக்காக படம் பிடித்துக்கொண்டிருக்கிறேன். சூர்யா நடிக்கும் இணையத்துக்கான படம் இது. இன்று படப்பிடிப்புத் தளத்தில் அதிகம் உற்சாகம் நிறைந்துள்ளது என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். இந்த படத்தில் கார்த்திக் நரேன் உள்ளிட்டோர் தங்களது குறும்படத்தை முடித்து விட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details