தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சூரரைப் போற்று' வெளியீடு தாமதம் - சூரரைப் போற்று படம் ரிலீஸ் தாமதம்

இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படம் வெளியீட்டில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

Suriya starrer Soorarai Pottru release date postponed

By

Published : Nov 5, 2019, 1:30 PM IST

நடிகர் சூர்யா நடித்து 'இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிவரும் திரைப்படம் 'சூரரைப் போற்று' என்பது பலரும் அறிந்ததே. இத்திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது. ஆனால் அதைவிட முக்கியான செய்தி என்னவெனில் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் எனக் கூறப்படுவதுதான்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற 10ஆம் தேதி வெளிவரும் எனவும் புதிய வெளியீடு தேதி போஸ்டரில் வெளிவரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தோடு சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சேர்ந்து படத்தினை தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷின் இசையில் வெளிவரும் இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க: முடிந்தது பெண்குயின் படப்பிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details