தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஏழாம் அறிவு' தொடர்ந்து 'காப்பான்'- சூர்யாவிடம் உதவி கேட்கும் 90ஸ் கிட்ஸ் - Suriya starrer Kaappaan remembered by fans

நடிகர் சூர்யாவின் திரைப்படங்களில் அமைந்த காட்சிகள் நிஜ வாழ்க்கையில் தற்போது நடந்து வரவே, அதனை கலாய்த்தும் 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணமாவது போன்ற படத்தில் சூர்யா நடிக்கவும் மீம்ஸ்கள் மூலம் நெட்டிசன்கள் கேலியாக வலியுறுத்தி வருகின்றனர்.

Suriya starrer Kaappaan remembered by meme creators
Suriya starrer Kaappaan remembered by meme creators

By

Published : May 28, 2020, 3:12 PM IST

சூர்யா, மோகன் லால். சாயிஷா, ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது 'காப்பான்' திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் வெட்டுக்கிளிகள் விளைநிலங்களை நாசம் செய்வது போன்ற காட்சி இடம்பெறும். அதுபோலவே சமீபத்தில் நடந்துக்கொண்டிருக்கும் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

முன்னதாக 'ஏழாம் அறிவு' திரைப்படத்தில் சீனாவில் இருந்து வைரஸ் பரவுவதை போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். தற்போது கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து சூர்யாவின் இந்தப் படங்களின் காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நடந்துகொண்டிருப்பதாக நெட்டிசன்கள் மீம்ஸ்களில் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு சம்பவம் படத்தில் முன்னரே இடம் பெற்றதையும் ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்,

தற்போது சூர்யாவின் மற்ற திரைப்படங்களின் காட்சிகளை எடுத்துக்கொண்டு அதை போலவே நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை பதிவிட்டும் கேலி செய்தும் வருகின்றனர். 2011ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற்றதை 'அயன்' திரைப்பட காட்சியுடன் வைத்தும் சூர்யாவுக்கு ஜோதிகாவுடன் நடைபெற்ற திருமணத்தை சில்லுன்னு ஒரு காதல் திரைப்பட கல்யாண காட்சியுடனும் ஒப்பிட்டு வருகின்றனர்.

இதையடுத்து, திருமணம் ஆகாத 90ஸ் கிட்ஸ்கள் தங்களுக்கு திருமணம் நடப்பதை போல படத்தில் நடிக்கக் கோரி மீம்ஸ்களை பகிர்ந்துவருகின்றனர். அனைவரும் நல்ல செய்திக்காக காத்திருப்போம்...

இதையும் படிங்க... பிரபல ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யா?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details