'இறுதிச்சுற்று' படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சூரரைப் போற்று'. இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏர் டெக்கான் என்ற பெயரில் குறைந்த கட்டணத்திலான விமான சேவையை தொடங்கிய கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் அவரது வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று(அக்.26) காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, , ‘சூரரைப் போற்று’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் குறைந்த கட்டணத்தில் விமானத்தை இயக்க சூர்யா முயற்சி செய்கிறார். அதற்குத் தடையாக ஏற்படும் நிகழ்வுகளை அவர் எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறார் என்பதே படத்தின் கதை என ட்ரெய்லர் மூலம் தெரிகிறது.
இதற்கிடையில் அபர்ணா பாலமுரளியுடன் ரொமான்ஸ், ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை என்று 'சூரரைப்போற்று' பட ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க:'தரமான சம்பவம்' - சூர்யாவின் 40ஆவது படத்தை இயக்குவது யார் தெரியுமா?