தமிழ்நாடு

tamil nadu

க/பெ.ரணசிங்கம் படத்திற்கு பாராட்டு தெரிவித்த சூர்யா

By

Published : Oct 5, 2020, 11:18 AM IST

சென்னை: விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

க/பெ.ரணசிங்கம்
க/பெ.ரணசிங்கம்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் க/பெ.ரணசிங்கம். கிராமத்து கதைக்களமாக வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ரசிகர்கள் தவிர திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அந்தவகையில் நடிகர் சூர்யா இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் க/பெ.ரணசிங்கம். இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் விஜய் சேதுபதியுடன் இனைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:க/பெ. ரணசிங்கம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு- கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

ABOUT THE AUTHOR

...view details