இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனின் மகளும் பிரபல பாடகியுமான தீ, பாடகர் 'தெருக்குரல்' அறிவு இருவரும் இணைந்து பாடி சமீபத்தில் வெளியிட்ட சுயாதீனப் பாடல் 'எஞ்சாயி எஞ்சாமி'. பூர்வகுடி மக்கள், இயற்கை வளம் குறித்து அறிவு எழுதி, இருவரும் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடல், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்து, பாராட்டுகளைக் குவித்துவருகிறது.
ரிப்பீட் மோடில் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் கேட்கும் சூர்யா! - சந்தோஷ் நாராயணன் பாடல்கள்
சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் தீ பாடிய 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் மிகவும் பிடித்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
Suriya
இந்தப் பாடலை பார்த்து இயக்குநர் செல்வராகவன், நடிகர் துல்கர் சல்மான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் சூர்யா இந்தப் பாடலை பார்த்து, பாடலின் வீடியோவும் வரிகளும் மிகவும் பிடித்துப் போயுள்ளது. ரிப்பீட் மோடில் இந்தப் பாடலை கேட்டுவருகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.