'அயன்', 'மாற்றான்' படங்களைத் தொடர்ந்து சூர்யா - கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'காப்பான்'. இப்படத்தில் மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
#kaappaantrailer: ஒரு உயிர் பலி கொடுத்து நூறு உயிர் 'காப்பான்' பாவம் இல்லை - ஆர்யா
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய பிரதமராக நடிக்கும் மோகன்லாலுக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அலுவலராக சூர்யா நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. சூர்யாவின் ஆக்ஷன், கலர்ஃபுல் காட்சி, மோகன் லாலின் வசனங்களால் ட்ரெய்லர் சிறப்பாக அமைந்துள்ளது.
செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு தணிக்கைக் குழு 'யூ/ஏ' (U/A) சான்றிதழ் வழங்கியுள்ளது. ஏற்கனவே டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.