தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சூரரைப் போற்று படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் சூர்யா - சுதா கொங்கரா - சூரைப் போற்று பாடல்கள்

சென்னை: சூர்யாவுடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது என சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

Actor Suriya
Actor Suriya

By

Published : Nov 6, 2020, 2:36 PM IST

'இறுதிச்சுற்று' படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சூரரைப் போற்று'. இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏர் டெக்கான் என்ற பெயரில் குறைந்த கட்டணத்திலான விமான சேவையை தொடங்கிய கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் அவரது வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.

அமேசன் பிரைமில் தீபாவளி வெளியீடாக நவம்பர் 12ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. சூர்யாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சுதா கொங்கரா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

சூர்யா குறித்து சுதா கூறியதாவது, "இந்தப் படத்தில் எனக்கு என்ன வேண்டும் என்று சூர்யாவுக்கு நன்றாகத் தெரியும். இப்படத்திற்காக அவர் 200 விழுக்காடு உழைப்பை கொடுத்திருக்கிறார். உண்மையாகப் பணியாற்றினார். இந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்

சூர்யாவுடன் பணிபுரிந்து ஒரு நல்ல அனுபவம். நாங்கள் இருவரும் ஒரே மாதிரியாக சினிமாவைப் பார்க்க விரும்புவர்கள். இந்தப் படத்தில் அவரது முழுமையான நடிப்பால் நான் திருப்தியடைந்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details