தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சூர்யாவுடன் கைகோர்த்த ஆர்யா; 70 கி.மீ. சைக்கிளில் பயணம்! - surya

சென்னை: நடிகர் சூர்யாவும், ஆர்யாவும் 70 கி.மீ. தூரம் ஒன்றாக சைக்கிளிங் செய்து உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

arya

By

Published : Mar 25, 2019, 11:06 AM IST

நடிகர் ஆர்யாவுக்கு ‘ஃபிட்னஸ் ஃப்ரீக்’ (Fitness Freak) என திரையுலகினரிடையே இன்னொரு பெயர் உண்டு. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் ஓய்விலிருந்தால், தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு ஈ.சி.ஆர். பக்கம் வலம்வருவது அவரது வழக்கம்.

அந்த வகையில், நேற்று நடிகர் சூர்யாவுடன் 70 கி.மீ. தூரம் ஒன்றாகபயணம்செய்து ஆர்யா உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆர்யா, 2 மணி நேரம் 55 நிமிடங்கள் சைக்கில் மிதித்து 1,114கிலோ கலோரிகளை எரித்திருப்பதாகவும், சூர்யா மிகவும் பலமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகை சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவரும் இணைந்து நடித்துவரும் படத்தில் நடிகர் சூர்யாவும் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details