தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’என் மீது பட்ட வெளிச்சம் உங்கள் கேமராவிலிருந்து வந்தது’ - சூர்யா உருக்கம் - kv anand death

முதன்முதல்‌ என்‌ மீது பட்ட வெளிச்சம்‌, உங்கள்‌ கேமராவிலிருந்து வெளிப்பட்டது, அதன் மூலமாகத்தான்‌ என்‌ எதிர்காலம்‌ பிரகாசமானது என கே.வி. ஆனந்த் மறைவு குறித்து சூர்யா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சூர்யா
சூர்யா

By

Published : May 1, 2021, 8:07 AM IST

Updated : May 1, 2021, 8:31 AM IST

இயக்குநர் கே.வி. ஆனந்த் மாரடைப்பு ஏற்பட்டு கோவிட்-19 காரணமாக நேற்று (ஏப்ரல் 30) உயிரிழந்தார். அவரது மறைவிற்குத் திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் கே.வி. ஆனந்தின் மறைவுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கே.வி. ஆனந்த்‌ சார்‌... இது பேரிடர்‌ காலம்‌ என்பதை உங்கள்‌ மரணம்‌ அறைந்து நினைவூட்டுகிறது. நீங்கள்‌ இல்லை என்ற உண்மை, மனமெங்கும்‌ அதிர்வையும்‌, வலியையும்‌ உண்டாக்குகிறது. ஏற்க முடியாத உங்கள்‌ இழப்பின்‌ துயரத்தில்‌, மறக்க முடியாத நினைவுகள்‌ அலை அலையாக உயிர்த்தெழுகின்றன.

நீங்கள்‌ எடுத்த‌ புகைப்படங்களில் தான்‌ சரவணன்‌, சூர்யாவாக மாறிய அந்த அற்புதத்‌ தருணம்‌ நிகழ்ந்தது. முன்பின்‌ அறிமுகமில்லாத ஒருவனை சரியான கோணத்தில்‌ படம்பிடித்துவிட வேண்டுமென, இரண்டு மணிநேரம்‌ நீங்கள்‌ கொட்டிய உழைப்பை இப்போதும்‌ வியந்து பார்க்கிறேன்‌. மெட்ராஸ்‌ டாக்கீஸ்‌ அலுவலகத்தில்‌ அந்த இரண்டு மணிநேரம்‌, ஒரு போர்க்களத்‌தில்‌ நிற்பதைப்‌ போலவே உணர்ந்தேன்‌.

முதன்முதல்‌ என்‌ மீது பட்ட வெளிச்சம்‌, உங்கள்‌ கேமராவில்‌ இருந்து வெளிப்பட்டது. அதன் மூலமாக தான்‌ என்‌ எதிர்காலம்‌ பிரகாசமானது. என்னுடைய திரையுலகப்‌ பயணத்தில்‌ உங்களின்‌ பங்களிப்பும்‌, வழிகாட்டலும்‌ மறக்கமுடியாதது. 'வளர்ச்‌சிக்கு நீ இதையெல்லாம்‌ மாற்றிக்கொள்ள வேண்டும்‌' என அன்புடன்‌ அக்கறையுடன்‌ சொன்ன வார்த்தைகள்‌ இப்போதும்‌ என்னை வழிநடத்துகின்றன.

’என மீது பட்ட வெளிச்சம் உங்கள் கேமராவிலிருந்து வந்தது’- சூர்யா உருக்கம்

எனது முதல்‌ திரைப்படத்தில்‌ நீங்களும்‌, உங்களின்‌ கடைசி திரைப்படத்தில்‌ நானும்‌ பணியாற்றியது இயற்கை செய்த முரண்‌. எங்கள்‌ நினைவில்‌ என்றும்‌ நீங்கள்‌ வாழ்வீர்கள்‌ சார்‌. இதயப்பூர்வமான நன்றி அஞ்சலி. நினைவுகளுடன் சூர்யா" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : May 1, 2021, 8:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details