தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வந்த விவேக், நேற்று (ஏப்ரல்.16) காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று(ஏப்ரல்.17) அதிகாலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.