இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஏர் டெகான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.
இதனையடுத்து வெற்றிமாறன் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று செய்துள்ளார்.
அதில், அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் #Suriya40 @theVcreations தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் இந்த ட்வீட்டால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.