உலகெங்கிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தொற்றால் பல துறைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பலரும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
இந்தத் தாக்குதலில் இருந்து திரைத்துறையும் தப்பவில்லை. திரைத்துறையையே நம்பி பல குடும்பங்கள் உள்ள நிலையில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் எனப்படும் ஃபெப்சியில் (FEFSI) பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கரோனா காரணமான பணி நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.