தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சூர்யா - ஹரி கூட்டணி: தொடரும் துரைசிங்கம் வேட்டை? - சூர்யா

சூர்யா மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணைந்து பணிபுரியவுள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.

Suriya and hari again for singham

By

Published : Oct 21, 2019, 1:42 PM IST

ஹரி - சூர்யா கூட்டணியில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சிங்கம்'. இந்தப் படத்துக்கு கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து இதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார் ஹரி.

இதுவரையிலும் மூன்று பாகங்கள் வெளியாகியுள்ளன, மூன்றாம் பாகத்தின் முடிவில் தொடரும் என படம் முடிக்கப்பட்டது.

இந்த மூன்று பாகங்களுமே வணிக ரிதீயாக வெற்றிபெற்ற திரைப்படங்கள் ஆகும். தற்போது இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சூர்யாவின் சகோதரர் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

'கைதி' படத்தின் தெலுங்கு வெர்சனின் முன் வெளியீட்டு விழாவில் கார்த்தி, இந்தத் தகவலை பகிர்ந்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறனும் சூர்யாவுக்கு ஒரு கதை சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சூர்யா யாரைத் தேர்வு செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஹரியுடன் பணிபுரிந்தால் அது 'சிங்கம் 4'-ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது என கோடம்பாக்க வட்டாரம் கிசுகிசுக்கிறது.

Suriya and hari again for singham sequel

சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள 'சூரரைப் போற்று' படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இதையும் படிங்க: சூரரைப் போற்று - இறுதிச்சுற்று ஹைதராபாத்தில்...!

ABOUT THE AUTHOR

...view details