தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பரிணாமத்தை காட்ட முயற்சிப்பவர் செல்வராகவன். இதுவரை அவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் ஏதோ ஒன்றை திரை ஒளி மூலம் ரசிகர்களுக்கு காவியமான படைப்புகளை தந்துள்ளார். இந்நிலையில், செல்வராகவன் -சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள 'என்ஜிகே' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. என்ஜிகே படத்தின் இசை மற்றும் டிரைலர் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
வெறிப்பிடித்து அலையும் சூர்யா- என்ஜிகே டிரைலர் - சூர்யா
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'என்ஜிகே' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மேலும், மாறுபட்ட வேடங்களில் வரும் சூர்யா, தனது மிரட்டலான நடிப்பால் பிரமிக்க வைத்துள்ளார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வதுபோல் என்ஜிகே டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. நடிகை சாய்பல்லவி சூர்யாவின் அரசியல் அச்சாரத்திற்கு வழிகாட்டியாக இருக்கிறார். ட்ரெய்லரில், யுவன்சங்கர் ராஜா பின்னணி இசையில் அதகளம் செய்திருக்கிறார் உயிரோட்டமாக இருக்கிறது. ரத்தமும் சதையுமாக மக்களின் மனதில் ஊறிப்போன அரசியலை செல்வராகவன் திரைவடிவில் மூலம் பிரமாதமான முறையில் பிரமாண்டம் படைத்துள்ளார்.
டிரலைரைப் பார்த்தே மிரண்டு போயுள்ள ரசிகர்கள் மே 31ஆம் தேதி வெளியாகும் படத்திற்காக மரண வெயிட்டிங்கில் காத்திருக்கின்றனர். இது சூர்யாவின் படமா என்றால் இல்லை இதுதான் செல்வாவின் படம் எனக்கூறிய ரசிகர்கள் 'காத்திருப்போம்' என்ற ஹாஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.