சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படம் சூர்யாவின் 40ஆவது படமாகும். எனவே தற்காலிகமாக 'சூர்யா 40' எனப் படக்குழுவினர் தலைப்பு வைத்துள்ளனர்.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
கிராமத்துப் பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கியது. அப்போது சூர்யா கரோனா தொற்று காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அதனால் சூர்யா இல்லாத இதர காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து சூர்யா மார்ச் 18ஆம் தேதி படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
அதனைத்தொடர்ந்து 'சூர்யா 40' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனிடையே , கரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.