ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆறாவது முறையாக ஹரி இயக்கத்தில் நடிக்கும் சூர்யா- உற்சாகத்தில் ரசிகர்கள் - surya movie updates

நடிகர் சூர்யாவின் 39ஆவது படத்தை இயக்குநர் ஹரி இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆறாவது முறையாக ஹரி இயக்கத்தில் நடிக்கும் சூர்யா
ஆறாவது முறையாக ஹரி இயக்கத்தில் நடிக்கும் சூர்யா
author img

By

Published : Mar 1, 2020, 5:28 PM IST

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இதற்கிடையில் சூர்யாவின் 39ஆவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்தபடி சூர்யாவின் 39ஆவது பட அறிவிப்பை கே.ஜே.ஆர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சூர்யாவின் 39ஆவது படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து கே.ஜே.ஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ''சூர்யா நடிக்கும் 39ஆவது படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இயக்குநர் ஹரி இயக்கும் இப்படத்திற்கு ‘அருவா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சூர்யா-ஹரி இணையும் 6ஆவது படம். இயக்குநர் ஹரியின் 16ஆவது படமாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி ஒரேகட்டமாக படப்பிடிப்பை முடித்து 2020ஆம் ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சூர்யா-ஹரி கூட்டணியில் தமிழில் ஐந்து படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சூர்யாவின் 39ஆவது படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிவா ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் பிஸியாகிவிட்டதால், ஹரியுடன் சூர்யா இணைந்திருக்கிறார்.

இதையும் படிங்க:'வலிமை' அஜித்துடன் மீண்டும் இணைந்த 'ஏகன்' நரேன்

ABOUT THE AUTHOR

...view details