சென்னை:'சூரரைப் போற்று' வெற்றியைத் தொடர்ந்து சூர்யா, பாண்டியராஜ் இயக்கும் 'எதற்கும் துணிந்தவன்', வெற்றிமாறனின் 'வாடிவாசல்', '#சூர்யா 39' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இன்று (ஜூலை.23) தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் சூர்யாவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் '#சூர்யா 39' படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகியுள்ளன. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'ஜெய்பீம்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.