செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் ஆகிய படங்களை தொடர்ந்து இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார். என்ஜிகே படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து மே 31ஆம் தேதி வெளியாகிறது. இதனைத்தொடர்ந்து காப்பான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதையடுத்து இந்த புதிய படத்தின் பூஜைகள் தொடங்கப்பட்டு சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அதிரடி மாஸ் காட்டும் சூர்யாவின் 'சூரரைப் போற்று' - படத்தின் டைட்டில்
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 38வது படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சூர்யா 38வது படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'சூரரைப் போற்று' என பெயர் வைத்துள்ளனர். அதில், வேஷ்டி சட்டையுடன் மாஸ் காட்டும் சூர்யா விமானத்தை அண்ணாந்து பார்த்தவாறு காட்சியளிக்கிறார். தற்போது இப்பட போஸ்டர் வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி வருகிறது.
மேலும், சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் டீசர் நாளை வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் பயங்கர உற்சாகமடைந்துள்ளனர்.