தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மாநாடு' பட அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்! - maanadu producer gives movie update

கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் படத்தின் அப்பேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

suresh kamatchi update on maanadu
suresh kamatchi update on maanadu

By

Published : Jul 21, 2020, 8:05 PM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் திரைப்படம் 'மாநாடு'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஊரடங்கு தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது பெரும்பாலான படங்களின் அப்டேட்கள் வெளிவந்த நிலையில், மாநாடு படத்தின் அப்டேட் வர வேண்டும் என்று சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ”மாநாடு படம் குறித்த அப்டேட்டை பலரும் அடிக்கடி கேட்டுவருகின்றனர். தற்போது நாங்கள் மட்டுமின்றி தமிழ்த் திரையுலகமே அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றோம். அரசு பச்சைக்கொடி காட்டியவுடன் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க...பக்காவான ஸ்கிரிப்ட் மாஸ்டர் பிளான் போடும் வெங்கட் பிரபு!

ABOUT THE AUTHOR

...view details