தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமெரிக்க தொலைக்காட்சியில் கலக்கும் இந்திய வம்சாவளி பெண்..! - லில்லி சிங்

அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'லேட் நைட் டாக் ஷோ'வை (Late night talk show) இந்திய வம்சாவளி பெண்ணான 'லில்லி சிங்' தொகுத்து வழங்கவுள்ளார்.

1

By

Published : Mar 18, 2019, 7:10 PM IST

அமெரிக்காவில் வசித்து வருபவர் லில்லி சிங். இந்திய வம்சாவளி பெண்ணான இவர் சிறந்த காமெடி நடிகரும், யூடியூப் நட்சத்திரமும் ஆவார். லில்லி சிங் கனடாவில் வளர்ந்து டொரெண்டோவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

இவர், 2010-ம் ஆண்டு "சூப்பர் உமென்" என்ற யூடியூப் சேனலை தொடங்கினார். இவரது யூடியூப் விடியோக்களுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

2017-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை வெளியிட்ட யூடியூபில் அதிகம் சம்பாதித்த பிரபலங்கள் பட்டியலில் லில்லி சிங்கும் இடம்பெற்றார். இதுமட்டுமின்றி ஏகப்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது இவரின் யூடியூப் சேனலை 14 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். யூடியூப் மட்டுமின்றி Ice Age: Collision Course, Bad Moms போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் லில்லி சிங் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற என்பிஎஸ் தொலைக்காட்சியில் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் ஒரு உரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் முதல் இந்த உரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளது இதுவே முதன்முறை. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இது குறித்து லில்லி சிங் கூறுகையில், ‘இந்த குழுமத்துடன் இணைவதை மிகுந்த மகிழ்ச்சியாகவும், ஆசியாகவும் கருதுகிறேன். இதற்காக என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

இவரது இந்தச் சாதனையைப் பிரியங்கா சோப்ரா முதல் பல ஹாலிவுட் பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details