தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

லண்டனில் ரஜினிகாந்த் மகளுக்கு நேர்ந்த சோகம்! - செளந்தர்யா

ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா, அவரது கணவர் விசாகன் ஆகியோரின் உடமைகள் லண்டன் விமான நிலையத்தில் திருடப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

rajini

By

Published : Sep 5, 2019, 9:23 PM IST

Updated : Sep 5, 2019, 11:43 PM IST

ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா, தொழிதிபர் விசாகன் என்பவரை சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், செளந்தர்யாவும் விசாகனும் சில தினங்களுக்கு முன் லண்டனில் உள்ள ஹீப்ரூக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்றனர்.

விமான நிலையத்திற்கு வந்த அவர்களிடம் குடியுரிமை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டபோது, அவர்கள் தங்களின் பாஸ்போர்ட் வைத்திருந்த கைப்பையை பார்த்தபோது அது திருடுபோனது தெரியவந்தது. மேலும், அந்த பையில் பாஸ்போர்ட் மட்டுமல்லாது அமெரிக்கா டலர்களும் இருந்துள்ளன. இதனையடுத்து, அவர்கள் விமான நிலையத்தில் இருந்த காவல் அலுவலர்களிடம் புகார் அளித்தனர். பின் பாஸ்போர்ட் இல்லாததையடுத்து அவர்களால் வெளியேற முடியமால் விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர்.

இது குறித்து உடனடியாக இந்திய தூதகரத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அலுவலர்கள், அவர்கள் ரஜினிகாந்தின் மகள், மருமகன் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு மாற்று பாஸ்போர்ட் வழங்கினார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செளந்தர்யா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். விமான நிலையத்தில் செளந்தர்யா - விசாகன் உடமைகள் காணமல் போன நிகழ்வால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Last Updated : Sep 5, 2019, 11:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details