தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இளையராஜா ஸ்டுடியோவிற்கு சென்று ஆச்சரியப்படுத்திய ரஜினிகாந்த் - இளையராஜா ஸ்டூடியோவில் ரஜினி

சென்னை: இசைஞானி இளையராஜா புதிதாக கட்டியுள்ள ஸ்டுடியோவை பார்த்து ரசித்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

Rajnikanth
Rajnikanth

By

Published : Feb 16, 2021, 7:49 PM IST

சென்னை தி நகரில் இளையராஜா சொந்தமாக "இளையராஜா ஸ்டுடியோ" என்ற பெயரில் ஹைடெக் ஸ்டுடியோ கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார். திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகின்றன.

இளையராஜா ஸ்டுடியோவில் ரஜினிகாந்த்

இந்நிலையில், நேற்று (பிப்.15) காலை இளையராஜா தி நகர் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் , அவருடன் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். பின்னர் இளையராஜா சொந்த ஸ்டுடியோ கட்டியிருப்பதை கேள்விப்பட்டு அந்த ஸ்டுடியோவுக்கு இளையராஜாவுடன் சென்றிருக்கிறார். மேலும் ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து, கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது என பாராட்டி இருக்கிறார்.

இளையராஜா ஸ்டுடியோவில் ரஜினி

இதனைத் தொடர்ந்து இன்றும் (பிப்.16) ரஜினிகாந்த் இளையராஜா ஸ்டுடியோவுக்கு சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சமீப காலமாக பொது நிகழ்ச்சி, விழாக்களில் கலந்துகொள்வதை தவிர்த்து வரும் ரஜினியின் இந்த வருகை பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புதிய ஸ்டுடியோவில் இசையமைப்பு பணிகளைத் தொடங்கிய இளையராஜா

ABOUT THE AUTHOR

...view details