தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

லாக்டவுனை பிகினியால் நேசிக்கும் 'கபாலி'யின் குமுதவள்ளி! - ராதிகா ஆப்தே படங்கள்

நடிகை ராதிகா ஆப்தே பதிவிட்ட பிகின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தை கிறங்கடித்து வருகின்றன.

Radhika Apte
Radhika Apte

By

Published : Apr 22, 2020, 3:17 PM IST

தமிழில் தோனி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராதிகா ஆப்தே 'கபாலி' படம் மூலம் பிரபலமானார். அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ராதிகா ஆப்தே, சினிமா மட்டுமல்லாமல் வெப் சீரிஸ் தொடர்களிலும் படு பிஸியாக உள்ளார்.

அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவதுடன், சர்ச்சைகளையும் கிளப்பி வருவார்.

இவரது கணவரும், இசைக் கலைஞருமான பெனிடிக்ட் டெய்லர் பிரிட்டனில் வசித்து வருகிறார். இதையடுத்து, இருநாடுகளுக்கும் அடிக்கடி பறந்து வரும் ராதிகா ஆப்தா தற்போது பிரிட்டனில் இருந்து வருகிறார். தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளத்தில் த்ரோ பேக் புகைப்படங்கள், ஒர்க் அவுட் வீடியோக்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து ராதிகா ஆப்தே, தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் இந்த லாக்டவுனை நேசிப்பதாகக் கூறி, பிகினி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் பதிவிட்ட சில மணி நேரத்திலேயே ரசிகர்களும் நெட்டிசன்களும் அதிகம் பகிர்ந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details