'தர்பார்' திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். 'அண்ணாத்த' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்தநிலையில், கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ’அண்ணாத்த’ திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே, ரஜினியின் ’பேட்ட’ படம் கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கும், ‘தர்பார்’ திரைப்படம் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'பேட்ட' பட ரகசியங்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்