தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பேருந்தில் பூத்த காதல் - ஃப்ளாஷ்பேக்கை பகிர்ந்துகொண்ட ரஜினி! - Rajini love experience

ரஜினி தனது முதல் காதல் பற்றி நடிகர் தேவனிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

rajini first love

By

Published : Oct 29, 2019, 3:09 PM IST

உலகம் முழுவதும் மாபெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது காதல் அனுபவம் பற்றி வில்லன் நடிகர் தேவனிடம் கூறியிருக்கிறார். தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த தேவன், அதுபற்றி பகிர்ந்துள்ளார்.

நிர்மலா எனும் மருத்துவக் கல்லூரி மாணவி, ரஜினி நடத்துநராக இருந்த பேருந்தில் தினமும் பயணித்திருக்கிறார். சண்டையில் தொடங்கியிருக்கிறது அவர்களின் காதல், பேருந்தில் ஏறும்போது தவறு செய்ததற்காக நிர்மலாவை ரஜினி திட்டியிருக்கிறார். பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ரஜினி தனது நாடகம் ஒன்றினை பார்ப்பதற்காக நிர்மலாவை அழைத்திருக்கிறார். ரஜினியின் நடிப்பை பார்த்து அசந்துபோன நிர்மலா, உடனடியாக சென்னை செல்லும்படி கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாது ரஜினிக்கு 500 ரூபாய் பண உதவியும் செய்துள்ளார். ஆனால் ரஜினியால் பின்னாளில் அந்த நிர்மலாவை கண்டுபிடிக்க முடியவில்லை. நிர்மலா தங்கியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு எங்கோ சென்றுவிட்டாராம்.

Actor Devan and Rajini

ஒரு பேட்டியில் கூட ரஜினியிடம் முதலில் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா என கேட்டதற்கு, சிரித்தபடி ஆமாம் என்பார். ஆனால் காதலியின் பெயரை சொல்ல மறுத்துவிடுவார். தற்போது சூப்பர் ஸ்டாரின் காதல் ரகசியம் பற்றி தேவன் மூலமாக தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: #Rajinism: உங்களுக்கு வயசே ஆகல! What a man!

ABOUT THE AUTHOR

...view details