ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘2.0’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்த இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ‘2.0’, மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனைத்தொடர்ந்து ஜப்பானில் இப்படம் திரையிடப்படவுள்ளது.
இந்நிலையில், ஆயுதபூஜையை முன்னிட்டு ஜப்பான் ரசிகர் ஒருவர் தமிழில் வாழ்த்து கூறும் வீடியோவை தற்போது ரஜினி ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அந்த வீடியோவில், அனைவருக்கும் வணக்கம், ஜப்பானில் இருந்து ஆயுத பூஜை நல்வாழ்த்துகள். இன்னைக்கு ஒரு குட் நியூஸ் இருக்கு. இந்த தீபாவளி அக்டோபர் 25 முதல் சூப்பர்ஸ்டார் ரஜினியின் திரைப்படம் 2.O ஜப்பானிலும் திரையிடப்படும். ஒன்லி ஒன் சூப்பர் ஒன் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் சீனாவில் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட ‘2.0’, ஏமாற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க: சீனா சென்றும் வீணாய்போன ‘2.0’!