தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்திற்கு இயக்குநராகும் நெல்சன்? - buzz about rajinikanth next film director

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்திற்கு இயக்குனராகும் நெல்சன்?
சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்திற்கு இயக்குனராகும் நெல்சன்?

By

Published : Feb 9, 2022, 11:39 AM IST

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து ரஜினிகாந்த் தற்போது ஓய்வில் இருந்துவருகிறார். மேலும், இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டுவந்ததாகக் கூறப்பட்டது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி, கே.எஸ். ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டோர் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்பட்டது. வெற்றிமாறன் இயக்க உள்ளதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கப்போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், அனிருத் இசை அமைக்கவுள்ளதாகவும் தகவல் பரவியுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அசோக் செல்வனின் 'நித்தம் ஒரு வானம்' டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர்!

ABOUT THE AUTHOR

...view details