'பேட்ட' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் 'தர்பார்'. இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மும்பையில் நடந்துவந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்த ரஜினிகாந்த், படம் நன்றாக வந்திருக்கிறது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டார் வீட்டிற்கு வந்த பிரபல நடிகர்! - ராகவா லாரன்ஸ்,
நடிகர் ரஜினி சினிமா பிரபலத்துடன் நவராத்திரி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
![சூப்பர் ஸ்டார் வீட்டிற்கு வந்த பிரபல நடிகர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4695132-thumbnail-3x2-rajini.jpg)
rajinikanth
இரண்டு நாள்களாக குடும்பத்துடன் ஆயுத பூஜை, விஜயதசமி விழாவை கொண்டாடி மகிழ்ந்தார். மேலும், தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தந்து சினிமா உலகினரை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்நிலையில், சிவராத்திரியான நேற்று தனக்கு நெருங்கிய சினிமா பிரபலங்களை வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனிடையே, நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினி, அவரது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.