தொலைக்காட்சிகளில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு என்று வந்தாலே சேனலை மாற்றாமல் தொடர்ந்து பார்க்கும் பேர் அநேகம். சூப்பர் குட் பிலிம்ஸின் படங்களைப் பார்த்தே வளர்ந்த 90's கிட்ஸ்தான் இங்கு ஏராளம். 'சூரிய வம்சம்', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'ஈ' உள்ளிட்ட பல தரமான படைப்புகளை வழங்கியுள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் கடந்த சில ஆண்டுகளாகப் படத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்து வந்தது.
களத்தில் சந்திக்க ரெடியாகும் சூப்பர் குட் பிலிம்ஸ்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு - யுவன் சங்கர் ராஜா
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ஜீவா, அருள்நிதி நடிப்பில் உருவாகிவரும் 'களத்தில் சந்திப்போம்' திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது ஜீவா, அருள்நிதி நடிப்பில் உருவாகிவரும் 'களத்தில் சந்திப்போம்' படத்தின் ஃபஸ்ட் லுக்கை இன்று காலை நடிகர் தனுஷ் வெளியிட்டார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள இந்த படத்தை ராஜசேகர் இயக்குகிறார். இப்படத்தில் 'மேயாத மான்' புகழ் பிரியா பாவனி சங்கர், மஞ்சிமா மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
நீண்ட வருடங்களுக்கு பின் ஜுவா தனது சொந்த பேனருக்கு நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் இது சூப்பர் குட் பிலிம்ஸின் 90ஆவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.