கனடாவின் மான்ட்ரியல் நகரில் வரும் ஜூலை 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை ஃபென்டஸியா சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இது வட அமெரிக்காவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாவாகும்.
சர்வதேச திரைப்பட விழாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’: அனுராக் கஷ்யப் மகிழ்ச்சி! - சர்வதேச திரைப்பட விழா
ஃபென்டஸியா சர்வதேச திரைப்பட விழாவுக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான 'சூப்பர் டீலக்ஸ்' திரையிடப்படவுள்ளது. இதில் லியம் ஹெம்ஸ்வொர்த் நடித்த ‘கில்லர்மேன்’, ரிச்சர்ட் ட்ரேஃபஸ் நடித்த ‘பாய்க்நன்ட் அஸ்ட்ரோநாட்’ ஆகிய படங்களும் திரையிடப்பட உள்ளன.
பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் இந்த செய்தியை பகிர்ந்து சூப்பர் என குறிப்பிட்டுள்ளார். ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அனுராக் கஷ்யப். நல்ல திரைப்படங்களை யார் எடுத்தாலும் மனம்விட்டு பாராட்டக் கூடியவர். தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்’ சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகி இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.