தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்..!' - சூப்பர் டீலக்ஸின் அசத்தல் 'டிங் டாங்' வீடியோ!

'ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்; அவன் என்கூட காலேஜ் படிச்சான்' எனத் தொடங்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் அசத்தல் 'டிங் டாங்' ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சூப்பர் டீலக்ஸ் படத்தின் 'டிங் டாங்' ப்ரோமோ வீடியோ வெளியீடு

By

Published : Mar 26, 2019, 1:48 PM IST

Updated : Mar 26, 2019, 2:58 PM IST

'ஆரண்ய காண்டம்' படத்தின் இயக்குனர் தியாகராஜன்குமாரராஜாவின் இயக்கத்தில் மார்ச் 29ஆம் தேதி வெளிவரும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இதில் விஜய் சேதுபதி, ஃப்கத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின் என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா மற்றும் வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு, இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக 'டிங் டாங்' என்ற ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் தோன்றியுள்ளனர். வெவ்வேறு வார்த்தைகள் பேசுவதை ஒன்றாக இணைத்து ப்ரோமோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வெகுவாகப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Mar 26, 2019, 2:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details