தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சன்னி லியோனின் 'ஷிரோ' ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு! - Shero

நடிகை சன்னி லியோன் நாயகியாக நடிக்கும் 'ஷிரோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (ஆக.7) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Sunny Leone
Sunny Leone

By

Published : Aug 6, 2021, 8:13 PM IST

ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் உருவாகிவரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம் 'ஷிரோ'. இதில் நாயகியாக நடிகை சன்னி லியோன் நடித்துள்ளனர்.

ஷிரோ ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக சன்னி லியோன் நடிக்கிறார்.

விடுமுறையைக் கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகைதருகிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.

சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும், இதில் ஆக்ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. மூணாறு, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

ஷிரோ

இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'ஷிரோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படக்குழு இறுதிகட்டப்பணிகளில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், 'ஷிரோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (ஆக.7) வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அட்டைப் பூச்சியை வைத்து படக்குழுவின் வலிமையை சோதித்த சன்னி

ABOUT THE AUTHOR

...view details