பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு இந்தியா மட்டுமல்லாது உலக முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சன்னி லியோன் எந்த அளவிற்கு புகழின் உச்சியில் இருக்கிறரோ அதே அளவிற்கு விமர்சனங்களையும் சந்திப்பவர்.
சன்னி லியோன் நடிகையாக மட்டுமல்லாது தாய், தொழில் முனைவேர், சமூக சேவகி என பண்முகம் கொண்டவராக திகழ்கிறார்.
சன்னி லியோன் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தும் இரட்டை குழந்தைகளையும் பெற்றும் அன்பாகப் வளர்த்து வருகிறார்.
சன்னி லியோன் குழந்தைகள் செய்யும் சுட்டிதனம் இந்நிலையில் இவரின் இரட்டை குழந்தைகள் சுட்டித்தனம் செய்யும் வீடியோ ஒன்று இணயத்தில் கலக்கி வருகிறது. அந்த வீடியோவில், சன்னி லியோன் படப்பிடிப்பு தளத்திலிருந்து கையில் ஒரு குழந்தையுடன் வெளியே வருகிறார். மற்றொரு குழந்தை அவரது பணிப்பெண் கொண்டு வருகிறார்.
வீட்டிற்கு வெளியே பத்திரிக்கையாளர்கள் இருந்தனர். அவர்கள் சன்னி லியோனிடம் பேட்டி எடுப்பதற்காக காத்திருந்தனர். அதை கண்ட அவரது குழந்தைகள் பத்திரிக்கையாளர்களை நோக்கி ஓடி வந்து 'ஹாய்' சொல்கின்றன. இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.