நடிகை சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் ஆகிய இருவரும் சமீபத்தில் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது சன்னியைப் பார்த்த ரசிகர் ஒருவர் அவருக்குக் கை கொடுத்துள்ளார். ஆனால் சன்னி லியோன் கை கொடுக்கமால் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார். அதே போன்று ஒரு பெண் ரசிகை ஒருவர் அவருடன் புகைப்படம் எடுக்க ஓடிவந்துள்ளார்.
அவரைக் கண்ட சன்னி லியோன் உடனே முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்துள்ளார். எப்போதும் ரசிகர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ளும் சன்னி லியோன் ஏன் இந்த முறை இப்படி நடந்து கொண்டார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர்.
பரவி வரும் கரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதால்தான் சன்னி லியோன் மாஸ்க் அணிந்து கொண்டார் என்றும் கை கொடுக்காமல் சென்றார் என்றும் தெரியவந்தது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் இருக்காதீர்கள். கரோனா வைரஸ் உங்களைப் பாதிக்காது என்று நினைக்க வேண்டாம். புத்திசாலியாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து கரோனா வைரஸ் குறித்து டேனியல் தனது பதிவில், ”விமான நிலையத்தில் கரோனா வைரஸ், பரவ அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட சன்னி லியோன் ரசிகர்கள் உங்களது அறிவுரைக்கும் அக்கறைக்கும் நன்றி என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: காதலர் தினத்தைக் குறி வைக்கும் ஆறு படங்கள்!