ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் உருவாகிவரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம் 'ஷிரோ'. இதில் நாயகியாக நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார்.
'ஷிரோ' ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. சாரா மைக் என்ற அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக சன்னி லியோன் நடிக்கிறார்.
விடுமுறையைக் கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தருகிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.
சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும், இதில் ஆக்ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. மூணாறு, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'ஷிரோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படக்குழு இறுதிகட்டப்பணிகளில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், 'ஷிரோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சன்னி லியோன் முகத்தில் ரத்த காயத்துடன் ஆக்ரோசமாக காணப்படுகிறார். விரைவில் இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'அமைதியை விரும்பும் நான் வன்முறையை ஆதரிக்க மாட்டேன்' - சன்னி லியோன்