கரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாள் முதலே அது பல மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும் ஊரடங்கால் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
இந்நிலையில் திரையில் மக்களை மகிழ்வித்து வந்த திரைப்பிரபலங்கள் இந்நேரத்தில் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் மக்களை குஷிபடுத்திவருகின்றனர். அந்த வகையில் பலரும் தங்களுக்கு பிடித்தமான வேலைகளை செய்து அதை தங்கள் சமூக வலைத்தளபக்கங்களிலும் பகிர்ந்துவருகின்றனர்.
இதற்கிடையில் தனக்கு கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நேரத்தில் தனது கைகளை வண்ணங்களில் மூழ்கி ஓவியம் வரைந்திருக்கிறார் நடிகை சன்னி வியோன்.
அந்த ஓவியத்தின் புகைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சன்னி, அதுகுறித்த தகவலையும் பதிவில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் 'இந்த லாக்டவுன் நேரத்தில் எனது ஓவியத்தை ஒருவழியாக முடித்திருக்கிறேன். இதை முடிக்க 40 நாள்கள் ஆகியுள்ளது. இதன் பெயர் ப்ரோக்கன் க்ளாஸ் (உடைந்த கண்ணாடி), தற்போது நாம் இருக்கும் நிலை போன்றது. எல்லாம் சிதைந்தது போன்று தெரியலாம். ஆனால் மீண்டும் முழுமை பெறுவதற்காக ஒவ்வொரு துண்டும் ஒன்றுக்கொன்று அருகில் உள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணிபுரிந்தால் நாமும் மீண்டும் ஒன்றாக உணரலாம். லவ் யூ ஆல்' என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க... 'அமைதியை விரும்பும் நான் வன்முறையை ஆதரிக்க மாட்டேன்' - சன்னி லியோன்
இதுபோன்று ஓவியங்கள் வரைவதில் சன்னி லியோன் தேர்ந்தவர். முன்னதாக ஓவியர் ஒருவர் வரைந்த புகைப்படத்தை சன்னி லியோன் வரைந்ததாக குற்றச்சாட்டு விடுக்கப்பட்டது. அந்த ஓவியத்தை யாருடைய ஓவியத்தை பார்த்து வரைந்தாரோ அவருக்கு க்ரெடிட் வழங்காமல் அதை சன்னி லியோன் ஏலம் விட்டதாக சர்ச்சை எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அந்த புகைப்படத்தை வரைய வேண்டும் என்று தனக்கு கொடுக்கப்பட்டதாகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டவே தான் அந்த புகைப்படத்தை வரைந்ததாகவும் சன்னி லியோன் தெரிவித்திருந்தார்.