தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அமைதியை விரும்பும் நான் வன்முறையை ஆதரிக்க மாட்டேன்' - சன்னி லியோன் - வன்முறையை ஊக்குவிப்பதில்லை சன்னி லியோன்

அமைதியை விரும்பும் நான் ஒருபோதும் வன்முறையை ஊக்குவிப்பதில்லை என்று ஜேஎன்யு விவகாரம் தொடர்பாக நடிகை சன்னி லியோன் கருத்து தெரிவித்துள்ளார்.

Sunny Leone
Sunny Leone

By

Published : Jan 10, 2020, 11:57 AM IST

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் மாணவர்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் மும்பையில் செய்தியாளர்களிடம், "சிஏஏ, ஜேஎன்யு விவகாரங்கள் தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், சிஏஏ மற்றும் ஜேஎன்யு பிரச்னை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அமைதியை விரும்பும் நான் ஒருபோதும் வன்முறையை ஊக்குவிப்பதில்லை.

நடிகை சன்னி லியோன் பேட்டி

நடக்கும் வன்முறையைப் பார்த்து நமது குழந்தைகளும் அதனைக் கற்றுக்கொள்ளக் கூடும். இது நமது சமுதாயத்தை பாதிக்கக்கூடிய ஒன்று. இவற்றையெல்லாம் கைவிட்டு ஒருவருக்கொருவர் சமாதானமாகப் பேசித் தீர்க்க வேண்டும். இந்த விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவருவார்கள் என நம்புகிறேன்" என்றார்.

இதையும் படிங்க...

இணைய தொடர்கள் திரைப்படங்களுக்கான மாற்று வடிவம் - கௌதம் மேனன்

ABOUT THE AUTHOR

...view details