சன்னி லியோன் பெயரைச் சொன்னாலே இந்தி திரையுலகம் மட்டும் அல்ல... இந்தியா முழுவதும் ஒரு அதிர்வு ஏற்படும். ஏன்னா, சன்னி லியோன் 'அடல்ட்ஸ் ஒன்லி' நடிகையாக இருந்து பாலிவுட் முன்னனணி நடிகையாகவும் ஒரு பெண்ணாக பல அவதாரங்கள் எடுத்தவர். சன்னி லியோன் 2017ஆம் ஆண்டு, இந்தியாவில் கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட ஒரு பெயர். அழகு, உடலமைப்பு, வசீகரம், நடிப்பு என பாலிவுட் உலகத்துக்கு வந்த சில ஆண்டுகளிலேயே, பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அதே நேரம், பல குடும்பங்களில் வெறுப்பையும் சன்னி லியோன் சம்பாதிக்கத் தவறவில்லை.
சன்னி லியோன் போட்டோ ஷூட் மே 13, 1981-ம் ஆண்டு கனடாவில் பிறந்தவர் சன்னி லியோன். இவரது அப்பா, ஜெஸ்பால் சிங், திபெத்தில் பிறந்து, டெல்லியில் வளர்ந்தவர்; அம்மா, பபுள் சிங். அருணாச்சலபிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர். பஞ்சாப்பின் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர், கனடா நாட்டு குடியுரிமையைப் பெற்ற இண்டோ- கனடியன்ஸ் ஆவர். நர்சிங் படிப்பை முடித்திருந்த அவர், 2003ஆம் ஆண்டு, 'பென்ட்ஹவுஸ்' இதழின் அட்டைப் படத்திற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்தார். சன்னி லியோன் இதுபோல் உச்சபட்ச கவர்ச்சிகளை வெளிப்படுத்த... வெளிப்படுத்த அவரின் குடும்பத்தினர் அவரை ஒதுக்கி வைத்தனர்.
சன்னி லியோன் இயற்கையை நேசிப்பவர். தனிமையில் யாருடைய துணையும் இல்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். திருமணத்திற்கு பின் சன்னி பாலிவுட்டில் கால் பதித்தார். 'ஜிஸம்-2' படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகம் ஆனார்.
சன்னி லியோன் எந்த நேரத்தில் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தாரோ அவரது காட்டில் அடைமழைதான். 'ஜிஸம்-2' படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது.
பாலிவுட்டிற்கு வந்த சன்னி தமிழில் சன்னி லியோன் 'வடகறி' படத்தில் ஜெய் உடன் ஒரு பாடலுக்கு நடனமாடினார். ஆனால், அதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து, வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி எனும் வரலாற்று படத்திலும், அரசியல் சார்ந்த படம் ஒன்றிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். கேரளா சென்றபோது ஒரு ஸ்டார் நடிகருக்கு வராத கூட்டம் சன்னி லியோனுக்கு கூடியது.
சன்னி லியோன் வெளிநாட்டு பயணம் தனது வாழ்க்கையில் துக்கம், மகிழச்சி வெறுப்பு தற்கொலை முயற்சி என அனைத்தையும் கடந்து மன தைரியத்துடன் இருக்கும் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு 'தி அன் டோல்ட் ஸ்டோரி' என்ற பெயரில் வெப்சீரீஸாக வெளியானது. இதற்கு பின்னால் சன்னி லியோன் ஒரு பெண், டேனியல் வெபருக்கு மனைவி, மூன்று குழந்தைகளுக்கு தாய், சமூக சிந்தனை கொண்ட ஒரு பெண் என்பதை இந்த உலகம் அங்கீகரிக்கத் தொடங்கியது.
சன்னி லியோன் வளர்ப்பு குழந்தை நிஷா குழந்தை மீது ஆர்வம் கொண்ட அவர், நிஷா என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சமீபத்தில் சன்னி லியோன் அளித்த பேட்டியில், “எனது வாழ்வில் நான் எடுத்த முடிவுகள் பற்றி நன்கு தெரியும். ஆனால், எனது முடிவு என்னை சுற்றி இருப்பவர்களுக்கும், எனது குடும்பத்திற்கும் எவ்வளவு அவப்பெயர் பெற்றுத்தந்தன என்பது பற்றித் தெரியாது. இப்போதுதான் பிறரது கஷ்டம் புரிகிறது. இந்தச் சமூகத்தில் நான் தொடக்கப்புள்ளியில் இல்லை, மையப்புள்ளியிலும் இல்லை. வாழ்வில் ஓரங்கட்டப்பட்ட பெண்ணாகவே இருக்கிறேன். புன்னகையும், மெளனமும்தான் எனக்கு கிடைத்த சாதனையாக பார்க்கிறேன்” என மென்மையுடன் தெரிவித்த சன்னிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
சன்னி லியோன், டேனியல் வெபர், அவரது குழந்தைகள்