நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு உதவி செய்யவுள்ளதாக நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தை இழந்து வாடும் குழந்தைகளுக்கு சந்தீப் கிஷன் உதவி - சந்தீப் கிஷன் படங்கள்
சென்னை: சந்தீப் கிஷன் கரோனா தொற்றால் குடும்பத்தை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கரோனா தொற்று நோயால் தங்கள் குடும்பத்தை இழந்துவாடும் குழந்தைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து அவர்களைப் பற்றிய தகவல்களை sundeepkishancovidhelp@gmail.com-க்கு அனுப்புங்கள்.
நானும் எனது குழுவும் அந்த குழந்தைகளின் உணவு, கல்வியைக் கவனித்துக் கொள்வதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய தயார். அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.