நடிகர்கள் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ’சுந்தரா டிராவல்ஸ்’. அசோகன் இயக்கிய இப்படத்தின் கதை ஒரு பழைய பேருந்தை சார்ந்து நகரும்.
தனது கடவுச்சீட்டை கடித்ததற்காக எலியைப் பழி வாங்க வடிவேலு செய்யும் நகைச்சுவை ஒருபக்கம், முரளி - வசந்தி காதல் ஒருபக்கம் எனப் படம் செம ஹிட்டானது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 19 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறது. இதில் முரளி, வடிவேலு நடித்த கதாபாத்திரத்தில் யோகி பாபு, கருணாகரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:உதயநிதியுடன் கூட்டணி சேரும் பிக்பாஸ் பிரபலம்