24 HRS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கே.திருஞானம் எழுதி இயக்கும் படம் "ஒன் 2 ஒன்". சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று (ஜன.21) தனது 54ஆவது பிறந்தநாளை ஒன் 2 ஒன் படக்குழுவினருடன் சுந்தர் சி கொண்டாடினார்.