முறைமாமன், உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கலகலப்பு, அரண்மனை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சுந்தர் சி. இவர் இயக்குநராக மட்டுமல்லாமல் வீராப்பு, தலைநகரம், முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே முகவரி, தொட்டி ஜெயா, ஏமாலி, ஆகிய படங்களை இயக்கிய வி.இசட். துரை இயக்கும் இருட்டு திரைப்படத்தின் கதாநாயகனாக காவல்துறை அலுவலராக நடித்துள்ளார்.
திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இருட்டு திரைப்படத்தில் சாய் தன்ஷிகா, யோகிபாபு, விடிவி கணேஷ், விமலா ராமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஏற்கனவே இப்படம் அக்டோபர் 11ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.