ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'பேட்ட'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இந்நிலையில் படத்தில் ஒளிந்து இருக்கும் சில ரகசிய விஷயங்களை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அது என்னவென்றால், 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்த், சில காட்சிகளில் சிறைச்சாலையில் இருப்பது போல் படமாக்கப்பட்டிருக்கும். அதில் அவர் அணிந்திருக்கும் சட்டையில் '165' என்ற எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இது ரஜினியின் '165ஆவது படம்' என்பதைக் குறிக்கிறது.
இதேபோல் படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சியில் ரஜினிகாந்த் 'NUNCHAKU' பயன்படுத்தி சண்டை போடுவார். அந்த சண்டைக் காட்சி படமாக்கப்படுவதற்கு 50 நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த், ஸ்டென்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயினிடம் முறையாக பயிற்சி எடுத்து கொண்டார்.
ரஜினிகாந்த் படம் என்றாலே அதில், அவர் பெயர் குறிப்பிட்ட டைட்டில் கார்டும், பின்னணி இசையும் தான் மிகவும் முக்கியமானது. அந்த வகையில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான 'பாபா' படத்திற்குப் பிறகு, 'பேட்ட' படத்தில் தான், 'SUPER STAR RAJINI' என்ற ஒரிஜினல் கிராஃபிக்ஸ் டைட்டில் கார்டு போடப்பட்டது.
அதேபோல் 1997ஆம் ஆண்டு வெளியான 'அருணாச்சலம்' படத்திற்குப் பிறகு 'பேட்ட' படத்தில்தான் ஒரிஜினலாக 'SUPER STAR RAJINI' என்ற டைட்டில் கார்டின் பின்னணி இசை இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விஜய்யைத் தொடர்ந்து ஊதியத்தைக் குறைத்து கொண்ட ஹரிஷ் கல்யாண்!