தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. முக்கியமாக தென் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், கிடா சண்டை உள்ளிட்டவைகளுக்கு அடுத்தப்படியாக சேவல் சண்டை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.
2011ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படம், சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இது ஆறு தேசிய விருதுகளையும் வாங்கி குவித்தது.
கருப்பு என்ற கதாபாத்திரத்தில் மதுரையைச் சேர்ந்த இளைஞனாக தனுஷ் நடித்திருப்பார். மதுரைத் தமிழை தனுஷ் தெளிவாக உச்சரித்திருந்தார். சேவலுடன் தனுஷ் பேசும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.