சென்னை: சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது. ரஜினியின் அண்ணாத்த, சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட், தனுஷின் திருச்சிற்றம்பலம் என வரிசையாக தன்வசம் முக்கிய கதாநாயகர்களின் படங்களை வைத்துள்ளது.
இதில் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வருவது உறுதியாகியுள்ளது. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை நவம்பர் இறுதியில் அல்லது கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் வலிமை படத்துடன் சூர்யாவின் இந்த படத்தை வெளியிட திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.