நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் கரோனா காரணமாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து பாண்டிராஜ், வெற்றிமாறன் ஆகியோர் படங்களில் நடிக்க இருக்கும் சூர்யா முதலில் பாண்டிராஜ் படத்தில் நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். இப்படம் கிராமத்து பின்னணியில் உருவாக உள்ளதாகவும் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் புதுக்கோட்டை, காரைக்குடி பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
டி. இமானுக்கு பிறந்தநாள் பரிசளித்த சன் பிக்சர்ஸ்! - director pandiraj
சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு டி. இமான் இசை அமைக்கிறார். இதனை அவரது பிறந்தநாளையொட்டி இன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ட
இந்நிலையில் இப்படத்தின் இசை அமைப்பாளர் யார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டி. இமான் இசை அமைக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று டி. இமானின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிறந்தநாள் பரிசாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்காக இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.