'பிப்ரவரி 14', 'ஆயிரம் விளக்கு' படங்களை இயக்கிய ஹோசிமின் நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் 'சுமோ' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு மிர்ச்சி சிவா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில், ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தோ-ஜப்பானிஸ் படமான 'சுமோ', சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாகும்.
ஜப்பானில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இப்படம் அடுத்தாண்டுப் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக, படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.