'தம்பி' திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'சுல்தான்'. 'ரெமோ' பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.
கோப்ராவைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுல்தான் திரைப்படம்!
கொரோனா வைரஸால் சுல்தான் படத்தின் அப்டேட் தாமதமாகிறது என்று தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கடந்தாண்டு இதே நாள் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து சில பிரச்னைகள் காரணமாகப் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், 'கொரோனாவால் சுல்தான் திரைப்படம் உள்பட்ட அனைத்துமே தாமதப்படுகிறது. அமைதியாக இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்'' என்று பதிவிட்டுள்ளார். இதேபோன்று கொரோனா வைரசால் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.