கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்' படம், ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தினை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் 'ஹாட் ஸ்டார்' ஓடிடியிலும் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், 'தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களைக் குறைந்தது 45 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸ் செய்யவோம் என்ற கடிதம் தர வேண்டும்' என்று திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதித்திருந்தனர்.